ETV Bharat / sports

‘பயிற்சிக்கு 1 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது’ - சாய்னா நேவால்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடருக்காகச் சென்றுள்ள இந்திய வீரர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே பயிற்சிபெற அனுமதிக்கப்படுவதாக சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பிடம் சாய்னா நேவால் ட்விட்டரில் முறையிட்டுள்ளார்.

Practice allowed for one hour, no access to physios and trainers: Saina tells BWF

author img

By

Published : Jan 5, 2021, 10:00 PM IST

சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்த ஆண்டு ஜனவரி 12 முதல் 17ஆம் தேதிவரையும், பாங்காங் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதிவரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடருக்கான எட்டு பேர் கொண்ட இந்திய அணி ஜனவரி மூன்றாம் தேதி தாய்லாந்திற்குச் சென்றது.

அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், இந்திய வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே பயிற்சி பெற அனுமதிக்கப்படுவதாகவும், தங்களது பிசியோ மற்றும் பயிற்சியாளர்களைக் காண எங்களை அனுமதிக்கவில்லை என்றும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பிடம் முறையிட்டுள்ளார்.

இது குறித்து சாய்னா நேவாலின் ட்வீட்டில், "எங்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை எனப் பரிசோதனை முடிவுகள் தெரிவித்த பின்னரும், இந்தச் சுற்றுப்பயணத்தின்போது பிசியோ மற்றும் பயிற்சியாளர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. இதனால் இந்த நான்கு வாரங்கள் நாங்கள் எப்படி செயல்பட முடியும். மேலும் நாங்கள் போட்டியை நல்ல நிலையில் விளையாட விரும்புகிறோம். அதனால் இந்தக் கரோனா நெறிமுறைகளை பிடபிள்யூஎஃப் முறைப்படுத்த வேண்டும்.

  • The physios and trainers cannot meet us during the entire tour after all of us have tested negative ? @bwfmedia @bwf_ac 4 weeks of this 🤷‍♀️🤷‍♀️ how is it possible to maintain ourselves . We want to play the tournament in good condition. Please sort this @bwfmedia .

    — Saina Nehwal (@NSaina) January 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • No Time for warm ups / taping / cool downs / stretches..we are talking about the best players in the world competing isn’t it ? We’ve spent a lot of money getting the physios and trainers along with us . If they can’t help us then why was this not told before ? @bwfmedia

  • Tried contacting @bwfmedia but no reply .. so had to do this ..

  • Practice only for an hour everyday for the entire team ? Gym timings the same ... considering March being the important Olympic qualification period this is not good enough to be in good shape . @bwfmedia

அதேபோல் எங்கள் முழு அணிக்கும் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே உடற்பயிற்சி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நேரத்தைக் கொண்டு எங்களால் எப்படி முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட முடியும்.

மேலும் இன்னும் ஆறு மாதங்களில் நாங்கள் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க வேண்டும். அதனை மனத்தில் வைத்து எங்களது பயிற்சி நேரத்தை அதிகரிக்க வேண்டும்" என்று பிடபிள்யூஎஃப்-க்கு சாய்னா நேவால் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க:ஒலிம்பிக் விளையாட்டுகளுக்காகத் தயாராகும் இந்தியத் தடகள வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.