சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்திய பி.வி. சிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதுகுறித்து, பிரதமர் மோடி,'அதிசய திறமையுடைய பி.வி சிந்து, மீண்டும் இந்தியாவைப் பெருமைபடுத்தியுள்ளார். BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றமைக்கு வாழ்த்துகள். ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ள பி.வி சிந்துவின் வெற்றி அடுத்து வரும் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.