ETV Bharat / sports

பேட்மிண்டன்: சிங்கப்பூர் ஓபன் படத்தை வென்றார் மொமோடா

author img

By

Published : Apr 14, 2019, 8:04 PM IST

சிங்கப்பூர்  ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றைய் சுற்று பட்டத்தை முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமோடா வென்றார்.

மொமோடா

இந்த ஆண்டுக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமோடா, இந்தோனேஷியாவின் அந்தோனி சினிசுகா கின்டிங்கை (anthony Sinisuka Ginting) எதிர்கொண்டார்.

முதல் செட்டை 10-21 என்ற தோல்வி அடைந்த மொமோடா, இரண்டாவது செட்டை 21-19 என்ற கணக்கில் போராடி வென்றார். இதைத்தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் அபாரமாக ஆடிய மொமோடா 21-13 என்ற கணக்கில் லாவகமாக வென்றார். இதன் மூலம் 10-21, 21-19, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதேபோல் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒகுஹாரா, தைவான் நாட்டைச் சேர்ந்த தை சூ யிங் உடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தை சூ யிங் (Tai Tzu ying) 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஒகுஹாராவை வீழ்த்தி இரண்டாவது முறையாக சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜப்பானின் கமுரா, சோனாடா (kamura, Sonada) இணை, 21-13, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவை சேர்ந்த முகமது அசான், ஹென்ட்ரா செதியவான் (Mohamad Ahzan, Hendro Setiyawan) ஜோடியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மகளிர் இரட்டை பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானின் மட்சுமோடோ, நகஹரா ( Matsumoto, Nagahara) ஜோடி 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் தென்கொரியாவின் கிம் - ஹை- ஜியாங், காங் -ஹி-யோங் ( Kim-Hee-jeong, Kong-hee -yong) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.