ETV Bharat / sports

அரையிறுதியில் சாய் பிரனீத்... சிங்கப்பூர் ஓபன் தோல்விக்கு பதிலடி கொடுப்பாரா?

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத், ஜப்பானின் கென்டோ மொமோடாவை (kento Momota) எதிர்கொள்கிறார்.

சிங்கப்பூர் ஓபன் தோல்விக்கு பதிலடி கொடுப்பாரா சாய் பிரனீத்
author img

By

Published : Jul 26, 2019, 8:19 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ஜப்பான் ஓபன், டோக்கியோவில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத், இந்தோனேஷியாவின் டாமி சுகியார்டோவை (Tommy Sugiarto) எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சாய் பிரனீத், 21-12, 21-15 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில், ஜப்பானின் கென்டோ மொமோடாவை சாய் பிரனீத் சந்திக்கிறார். இவ்விரு வீரர்களும் இதுவரை நான்கு முறை நேருக்கு நேர் மோதியதில் இருவரும் தலா இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளனர் என்பதால் நாளைய போட்டி பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.

kento Momota
கென்டோ

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் தொடரில்தான் இவ்விரு வீரர்களும் இறுதியாக பலப்பரீட்சை நடத்தினர். இதில், முதல் சுற்றுப் போட்டியிலேயே சாய் பிரனீத் 21-19, 14-21, 20-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இதனால், அந்தத் தோல்விக்கு அவர் நாளை பதிலடி தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Intro:Body:

Japan open badminton - Sai pranith reached semi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.