ETV Bharat / sports

பேட்மிண்டன்: சவுரப் வர்மா தோல்வி - Sourabh Verma

சீன தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் சவுரப் வர்மா தோல்வியடைந்தார்.

Sourabh Verma
author img

By

Published : Sep 5, 2019, 10:49 PM IST

சீன தைபை ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய நாட்டின் சார்பில் சவுரவ் வர்மா, வீராங்கனை ராணி முகர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ராணி முகர்ஜி முதல் சுற்றுப் போட்டியிலேயே தாய்லாந்தின் கெட்தாங்கிடம் தோல்வி அடைந்தார்.

அதேசமயம், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் வர்மா 22-20, 21-13 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் சகாய்-யை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் அவர் சீன தைபேவின் சவ் தியேன் - சென் உடன் மோதினார். இதில், சவுரப் வர்மா 12-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். இந்தத் தோல்வியின் மூலம், இந்தியாவுக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் வீணானதாக ரசிகர்கள் புலம்புகின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.