கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தேதி குறிப்பிடாமலே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டோக்கியோவில் நடைபெறவிருந்த 32ஆவது ஒலிம்பிக் போட்டி தொடரும் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், கடந்த இரண்டு மாதங்களில் நடைபெறவிருந்த இந்திய ஓபன், சீன மாஸ்டர்ஸ் ஓபன், இந்தோனேஷிய ஓபன் உள்ளிட்ட பல பேட்மிண்டன் தொடர்களும் தள்ளிவைக்கப்பட்டன.
இந்த நிலையில், கரோனா வைரஸால் தள்ளிவைக்கப்பட்ட பேட்மிண்டன் தொடருக்கான அட்டவனையை சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு (பி.டபள்யூ.எஃப்) மாற்றியமைத்து புதுபிக்கப்பட்ட அட்டவனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹைதராபாத் ஓபன் தொடர் வரும் ஆகஸ்ட் 11 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு, சீன மாஸ்டர்ஸ், தைபே ஓபன், கொரியா ஓபன், சையத் மோடி ஓபன், நியூசிலாந்து ஓபன் உள்ளிட்ட தொடர்களும் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன.
இதில், மார்ச் மாதம் 24 முதல் 29வரை நடைபெறவிருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய ஓபன் தொடர் வரும் டிசம்பர் 8 முதல் 13வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.டபள்யூ.எஃப் புதுபிக்கப்பட்ட அட்டவனையின் படி ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஐந்து மாதங்களில் 22 தொடர்கள் வரிசையாக நடைபெறவுள்ளன.
-
22 events in 5 months . Ok 🤷🏻♂️ . Firstly , practice hasn’t begun yet . @hkvittinghus @ViktorAxelsen @NSaina @PRANNOYHSPRI @janojorgensen @CarolinaMarin @srikidambi @saiprneeth92. Your thoughts guys ?? pic.twitter.com/nvsAzt6vzh
— Parupalli Kashyap (@parupallik) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">22 events in 5 months . Ok 🤷🏻♂️ . Firstly , practice hasn’t begun yet . @hkvittinghus @ViktorAxelsen @NSaina @PRANNOYHSPRI @janojorgensen @CarolinaMarin @srikidambi @saiprneeth92. Your thoughts guys ?? pic.twitter.com/nvsAzt6vzh
— Parupalli Kashyap (@parupallik) May 22, 202022 events in 5 months . Ok 🤷🏻♂️ . Firstly , practice hasn’t begun yet . @hkvittinghus @ViktorAxelsen @NSaina @PRANNOYHSPRI @janojorgensen @CarolinaMarin @srikidambi @saiprneeth92. Your thoughts guys ?? pic.twitter.com/nvsAzt6vzh
— Parupalli Kashyap (@parupallik) May 22, 2020
பி.டபள்யூ.எஃப் வெளியிட்ட இந்த நெருக்கடியான அட்டவனைக்கு இந்திய நட்சத்திரங்களான பாருபள்ளி காஷ்யப், சாய்னா நெவால், சாய் பிரனீத் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், 5 மாதங்களில் 22 தொடர்கள் நடைபெறுவது பரவாயில்லை.
ஆனால் அதற்கு இன்னும் பயிற்சியே தொடங்கப்படவில்லை என பதிவிட்டது மட்டுமின்றி புதுபிக்கப்பட்ட அட்டவனை பட்டியலையும் இணைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, காஷ்யப்பின் இந்த பதிவிற்கு அவரது மனைவியும் இந்திய நட்சத்திர வீராங்கனையுமான சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐந்து மாதங்களில் இடைவிடாத பயணம்... கரோனா வைரஸ் பெருந்தொற்றின் மத்தியில் பயணிப்பதற்கான சர்வதேச வழிகாட்டுதல்கள் எப்படி இருக்கும் என்ற பெரிய கேள்வி தற்போது எழுந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
-
5 months non stop travel ... biggest question is what are the international guidelines of travelling during this #coronavirus pandemic??
— Saina Nehwal (@NSaina) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">5 months non stop travel ... biggest question is what are the international guidelines of travelling during this #coronavirus pandemic??
— Saina Nehwal (@NSaina) May 22, 20205 months non stop travel ... biggest question is what are the international guidelines of travelling during this #coronavirus pandemic??
— Saina Nehwal (@NSaina) May 22, 2020
அதேபோல், காஷ்யப்பின் பதவிற்கு சாய் பிரனீத், இந்தச் சூழ்நிலையில், பயணத்தை குறைத்துக்கொள்ள வேண்டுமென மக்கள் அறிவுறுத்துகிறார்கள் ஆனால், முன்பை விட நாங்கள் அதிகமான பயணங்களை மேற்கொள்ளவுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
-
Ppl are saying to reduce travel amd we are doing more travel than before 😂😂😂😂 https://t.co/WlFjUEV1Tp
— Sai Praneeth (@saiprneeth92) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ppl are saying to reduce travel amd we are doing more travel than before 😂😂😂😂 https://t.co/WlFjUEV1Tp
— Sai Praneeth (@saiprneeth92) May 22, 2020Ppl are saying to reduce travel amd we are doing more travel than before 😂😂😂😂 https://t.co/WlFjUEV1Tp
— Sai Praneeth (@saiprneeth92) May 22, 2020
மேலும், பாருபள்ளி காஷ்யப் தனது அடுத்தப் பதவில், சையத் மோடி பேட்மிண்டன் தொடரும், இந்தோனேஷியா பேட்மிண்டன் தொடரும் ஒரே தேதியில் நடைபெறுவதையும் காஷ்யப் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் சுட்டிக்காட்டியதை போலவே இந்த இரண்டு தொடர்களும் நவம்பர் 17 முதல் 22 வரை நடைபெறுமென பி.டபள்யூ.எஃப் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'உங்களது சொந்த பாதுகாப்பில் பயிற்சியைத் தொடங்குங்கள்' - அதிர்ச்சியில் வீரர்கள்