சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் 2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில், தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை பி.வி. சிந்து படைத்தார். அதே நாளில்தான், மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனையும் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
ஆனால், சிந்துவின் வெற்றியால் அவரின் சாதனை யார் கண்ணுக்கும் தெரியாமல்போனது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பேட்மிடன் உலக சாம்பியன்ஷிப் தொடரும் அதே பசெல் நகரில்தான் நடைபெற்றது. அதில், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மானசி ஜோஷி, இந்தியாவைச் சேர்ந்த பார்மரை எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய மானசி 21-12, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று தங்கம் வென்றார்.
மும்பையை சேர்ந்த இவர் இளம் வயதில் இருந்தே பேட்மிண்டனில் அதீத ஆர்வம் கொண்டவர். 2011இல் நடந்த சாலை விபத்தில் இவரது இடது கால் மீது வாகனம் ஒன்று ஏறியதால் அந்தக் காலை இழந்தார். எனினும், பேட்மிண்டன் விளையாட இவருக்கு இது ஒரு தடையாக இல்லை. வாழ்வில் கடுமையாக போராடினால் வெற்றிபெறலாம் என்பதை இவர் பாரா பேட்மிண்டனில் பல பதக்கங்களை வென்று பலமுறை நிரூபித்திக் காட்டினார்.
குறிப்பாக, 2015இல் பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றார். அதேபோல், 2018இல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். பேட்மிண்டனை கைவிடாமல் சாதித்த இவர் தற்போது பல இளம் வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
”இந்தியாவின் ஒவ்வொரு மகள்களும் சிறப்பானவர்கள்தான். உலக அளவில் நம் நாட்டின் பெருமையை நீங்கள் அதிகரித்துள்ளீர்கள். தங்கம் வென்றதற்கு உங்களுக்கு வாழ்த்துகள்”, என மத்தியபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதிவிட்டிருந்தார். அதேபோல, நடிகர் விவேக், தங்கம் வென்ற சிந்துவை பாராட்டிவருகிறோம் அதேபோல, காலை இழந்தாலும் பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மானசி ஜோஷியையும் நாம் பாராட்ட வேண்டும், என அவர் பதிவிட்டிருந்தார்.
-
I earned it.
— Manasi Nayana Joshi (@joshimanasi11) August 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Worked every bit for it. pic.twitter.com/sGZRL9GWMu
">I earned it.
— Manasi Nayana Joshi (@joshimanasi11) August 27, 2019
Worked every bit for it. pic.twitter.com/sGZRL9GWMuI earned it.
— Manasi Nayana Joshi (@joshimanasi11) August 27, 2019
Worked every bit for it. pic.twitter.com/sGZRL9GWMu
இந்நிலையில், என் கடுமையான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான் இந்தத் தங்கப்பதக்கம் என மானசி ஜோஷி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, சாதனை படைத்த தங்கமங்கை மானச் சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.