ETV Bharat / sports

பேட்மிண்டன்: காலிறுதிச் சுற்றில் ஹெச்.எஸ்.பிரணாய்

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் ஹெச்.எஸ்.பிரணாய்
author img

By

Published : May 2, 2019, 7:47 PM IST

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆக்லாந்து நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய், இந்தோனேஷியாவின் டாமி சுகியார்ட்டோவுடன் ( Tommy Suagiarto) மோதினார்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரணாய் 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் அவர் ஜப்பானின் கன்ட்டா சுனேயமாவை ( Kanta Tsuneyama) எதிர்கொள்ளவுள்ளார்.

இதேபோன்று, முன்னதாக நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் சீன வீரர் லின் டானிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மனு அட்ரி - பி.எஸ். ரேட்டி ( Manu Attri - B.S Reddy), 17-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கோ.வி.எஸ் - டான் இணையிடம் ( Goh V S - Tan W K) வீழ்ந்தது.

 சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில்
சென்னை மண்டலம் 92.93 சதவீதம் தேர்ச்சி  

சென்னை, 
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில்  திருவனந்தபுரம் மண்டலம் 98.20 விழுக்காடு பெற்று முதலிடத்தையும், சென்னை மண்டலம் 92.93 விழுக்காடு பெற்று 2 ம் இடத்தையும் பெற்றுள்ளது.  
12 ம்  வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15 ந் தேதி முதல் ஏப்ரல் 4 ந் தேதி வரயில் நடைபெற்றது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 12,441 பள்ளிகளில் இருந்து 12,05,484 மாணவர்கள் 4627 மையங்களில் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் 10 லட்சத்து 5 ஆயிரத்து 427 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 83.40 சதவீதமாக இருக்கிறது. 
மண்டல அளவில் திருவனந்தபுரம் மண்டலம் 98.20 சதவீதம் பெற்று முதலிடத்தையும், சென்னை மண்டலம் 92.93 சதவீதம் பெற்று 2 ம் இடத்தையும், டெல்லி மண்டலம் 91.87 சதவீதம் பெற்று 3 ம் இடத்தையும் பெற்றுள்ளன. 
அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 88.49 விழுக்காடும், அரசுப் பள்ளியில் படித்த  மாணவர்கள் 87.17 விழுக்காடும், சுயநிதிப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 96.62 சதவீதமும், ஜவகர் நவோதயா பள்ளியில் படித்த மாணவர்கள் 96.62 சதவீதமும், கேந்திரிய வித்யாலாய பள்ளியில் படித்த மாணவர்கள் 98.54 விழுக்காடும், மத்திய திபெத்தியன் குழந்தைகள் சொசைட்டியால் நடத்தப்படும் பள்ளியில் படித்த மாணவர்கள் 96.06 விழுக்காடும் தேதர்ச்சி பெற்றுள்ளனர். 
12 ம் வகுப்பு தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்களை உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா, கரிஷ்மாக அரோரா ஆகியோர் பெற்றுள்ளனர். 2 ம் இடத்தை 3 மாணவர்களும்,   சென்னையை சேர்ந்த  கார்த்திக் பாலாஜி உள்பட 497 மதிப்பெண்கள் பெற்று 18 பேர் பெற்றுள்ளனர். 
சென்னை மண்டலத்தில் உள்ள 1153 பள்ளிகளில் படித்த 82,719மாணவர்கள்   620 மையங்களில் தேர்வினை எழுதினர். அவர்களில் 76,873 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 41,338 மாணவர்களும், 35,535 மாணவிகளும் ஆவார்கள். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.