சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இதன் விளைவாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், பேட்மிண்டன் வீரர்களின் பாதுகாப்பை நலன் கருதி மார்ச் 16 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறவுள்ள பேட்மிண்டன் தொடர்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த முடிவால் சுவிஸ் ஓபன், இந்தியா ஓபன், ஆர்லியன் ஓபன், மலேசிய ஓபன், சிங்கப்பூர் ஓபன் ஆகிய ஐந்து தொடர்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த இந்திய ஓபன் தொடர் மார்ச் 24 முதல் மார்ச் 29ஆம் தேதிவரை தலைநகர் டெல்லயில் நடைபெறவிருந்தது. இதனிடையே பிர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. அதன் பின் இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: நியூசிலாந்து வீரருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி!