ETV Bharat / sports

பிரணீத், சிந்துவுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு! - சாய் பிரணீத்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சாய் பிரணீத் ஆகியோருக்கான பரிசுத் தொகையை இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

sai praneeth, PV sindhu
author img

By

Published : Aug 26, 2019, 11:49 AM IST

சமீபத்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் நிகழ்தினார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற பி.வி.சிந்து

அதேபோல், இந்தியாவின் சாய் பிரணீத் ஆடவர் ஒற்றையர் சாம்பியன்ஷிப் போட்டியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் பி.வி. சிந்து, சாய் பிரணீத் இருவருக்கும் 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறுகையில், ’இந்த வெற்றியானது சிந்துவிற்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கே இன்றியமையாத வெற்றியாகும், தங்கப் பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இது பேட்மிண்டன் வரலாற்றிலேயே மிக முக்கியமான தருணமாகும்’ என தெரிவித்தார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற சாய் பிரணீத்

மேலும், ’சாய் பிரணீத் 36 ஆண்டுகளுக்கு பி்றகு இந்திய ஆடவர் அணிக்காக சாம்பியன்ஷிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். 1983ஆம் ஆண்டு பிரகாஷ் படுகோனேவிற்கு பிறகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவிற்கு சாய் பிரணீத் மூலம் பதக்கம் கிட்டியுள்ளது. இது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய வெற்றியாகும். பி.வி. சிந்து, சாய் பிரணீத் ஆகியோருக்கு இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளோம் என்றார்.

Intro:Body:

gg

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.