ETV Bharat / sports

ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதியில் சிந்து தோல்வி

லண்டன்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் ஒகுஹாராவிடம் தோல்வியடைந்தார்.

All England: Sindhu knocked out, Indian chAll England: Sindhu knocked out, Indian challenge endsallenge ends
All England: Sindhu knocked out, Indian challenge ends
author img

By

Published : Mar 13, 2020, 11:35 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் லண்டனில் நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி ஒகுஹாராவிற்கு அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடிய ஒகுஹாரா 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினார்.

பின் ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை13-21 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்து வீழ்த்தினார். இதன் மூலம் ஜப்பானின் ஒகுஹாரா 12-21, 21-15, 21-13 என்ற செட் கணக்குகளில் சிந்துவை வீழ்த்தி ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க:ஆளில்லா மைதானங்கள்... பந்தை தேடும் கிரிக்கெட் வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.