எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை. நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இப்படம் தமிழ்நாட்டில் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகி இங்கு மட்டுமல்ல திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலுமே வசூலினைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். டாக்டர், மாநாடு படங்களின் ஒட்டு மொத்த வசூலை 4 நாட்களில் கடந்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.
விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை என்றும்; குடும்ப ரசிகர்கள் கொண்டாடுகின்றனர் என்றும்; அதுவே வெற்றியை நிர்ணயிக்கிறது என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை: கே.டி.குஞ்சுமோன் வருத்தம்