பிரபல பாடகி கமிலா கப்லோ நடிகையாக அறிமுகமாகவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன்.
உலக அளவில் புகழ் பெற்ற குழந்தைகள் கதையான சிண்ட்ரெல்லா கதையை, டிஸ்னி நிறுவனம் 1950களில் அனிமேஷன் தொடராக வெளியிட்டது. மிகவும் பிரபலமான இந்தத் தொடரை அடிப்படையாகக் கொண்டு 1997, 2015ஆம் ஆண்டுகளில் இரண்டு படங்கள் வெளியானது.
இதைத் தொடர்ந்து தற்போது சிண்ட்ரெல்லா கதையை வைத்து மீண்டும் ஒரு புதிய படம் தயாராகவுள்ளது. இந்தப் படத்தை சோனி பிக்ஸர்ஸ் நிறுவனத்துக்காக இயக்குநர் கே. கேனான் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் மூலம் புகழ் பெற்ற பாடகியான கமிலா கப்லோ நடிகையாக அவதாரம் எடுக்கிறார். படத்தில் இவரது ஜோடியாக முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் நடிக்கவுள்ளார்.
பில்லி போர்டர், ஐடினா மென்ஸல், நிக்கோலஸ் காலிட்சின் உள்ளிட்ட பலரும் படத்தில் நடிக்கிறார்கள். 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
மியூசிக்கல் காமெடி பாணியில் உருவாகவிருக்கும் இப்படத்தில், சிண்ட்ரெல்லாவாக கமிலா கப்லோவும், இளவரசன் வேடத்தில் பியர்ஸ் பிராஸ்னனும் தோன்றவுள்ளனர். நான்கு முறை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தோன்றி ஆக்ஷன், ரொமான்ஸ் என இரண்டிலும் வெளுத்து வாங்கிய பிராஸ்னன், தற்போது மாறுபட்ட கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
ஜேம்ஸ் கோர்டென் மற்றும் லியோ பியர்ல்மேன் ஆகியோர் இணைந்து படத்தை ஃபுல்வெல்73 பேனர் சார்பில் தயாரிக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: பெண்களுக்கு வழிவிடும் நேரம் இதுதான் - புதிய பாண்ட் குறித்து பழைய பாண்ட்