இருவரும் இணைந்து போட்டியாளர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசித்தனர். இதன் பின்னர் நிக் ஜோனஸ் தனது இன்ஸ்டாகிராமில், "ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டவரும், அழகுப் பதுமையுமான இந்தப் பெண்ணுடன் இணைந்து ஆஸ்கர் போட்டியாளர்களை அறிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்கர் பந்தயத்தில் தேர்வாகியுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். ஏப்ரல் 25ஆம் தேதி வெற்றியாளர்களைக் காண உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
கணவர் ஜோனஸின் இந்தப் பதிவுக்கு சற்றும் தாமதம் அளிக்காமல், ஹார்ட் எமோஜியுடன் என்றென்றும் என்னுடம் இருப்பவர் என்று கமெண்ட் அடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரொமாண்ஸுக்குப் பிறகு நடிகை பிரியங்கா தன் பங்கிற்கு ட்விட்டரில் இந்தச் சிறப்புமிக்க தருணம் குறித்த ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தி ஒய்ட் டைகர் படத்துக்காக நாங்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளோம். ரமின் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.
-
My very own Oscar! It was so lovely to share this moment with you @nickjonas I love you. ❤️Catch the oscars on April 25th! #OscarNoms https://t.co/xhIx9YgwvL
— PRIYANKA (@priyankachopra) March 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My very own Oscar! It was so lovely to share this moment with you @nickjonas I love you. ❤️Catch the oscars on April 25th! #OscarNoms https://t.co/xhIx9YgwvL
— PRIYANKA (@priyankachopra) March 15, 2021My very own Oscar! It was so lovely to share this moment with you @nickjonas I love you. ❤️Catch the oscars on April 25th! #OscarNoms https://t.co/xhIx9YgwvL
— PRIYANKA (@priyankachopra) March 15, 2021
ஆஸ்கர் விருதின் போட்டியாளராக உள்ளேன் என்பதை நானே அறிவித்துக்கொண்டது சிறப்பான தருணமாக அமைந்தது. மிகவும் பெருமையாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் இணைத்து ஆஸ்கர் விருது தோற்றத்தில் இருக்கும் பொம்மை ஒன்றை கைகளால் அணைத்தும், கணவர் ஜோனஸுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களையும் அவர் இணைத்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது வீட்டில் இருந்தவாறே இந்த விருதுகளின் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிரியங்கா சோப்ரா, ஆதர்ஷ் கெளரவ், ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்து, ராமின் பக்ராணி இயக்கியுள்ள தி ஒய்ட் டைகர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகளில் ஓடிடியில் வெளியாகும் படைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரியங்கா நடித்து தி ஒயிட் டைகர், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இவர் நடித்தது மட்டுமில்லாமல் இணைத் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
இதையும் படிங்க: ஒசாகா சர்வதேசத் திரைப்பட விழாவில் அசுரன்!