அமெரிக்காவின் பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் பிரபல அமெரிக்க மாடலான ஹெய்லி பால்ட்வினை 2018ஆம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக ஜஸ்டின் பீபர், இந்தாண்டு நடைபெறவிருந்த தனது அனைத்து இசை நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
கரோனா தொற்று அச்சம் காரணமாக வீட்டில் இருக்கும் ஜஸ்டின் பீபர், தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார். இதனையடுத்து தனது சமூக வலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது நாயுடன் ஹெய்லி பால்ட்வின் இருக்கும் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் புகைப்படத்திற்கு 'என் குடும்பம்' என்று கேப்ஷன் இட்டுள்ளார்.
ஹெய்லி பால்வின் தனது செல்ல நாய்க்குட்டியைக் கட்டிப்பிடித்த, கறுப்பு வெள்ளைப் புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.