லாஸ் ஏஞ்சல்ஸ்: பாடகி டெய்லர் ஸ்விப்ட் பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் ஜிம்மை விட்டு வெளியேறுமாறு ஜஸ்டின் பீபரிடம் ஜிம் நிர்வாகம் கூறிய சம்பவம் ஹாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
ஹாலிவுட் பாப் பாடகர்களாகத் திகழும் ஜஸ்டின் பீபர், டெய்லர் ஸிவிப்ட் ஆகிய இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் மேனேஜராக செயல்பட்டு வந்த ஸ்கூட்டர் ப்ரானை நீக்கினார் டெய்லர் ஸ்விப்ட்.
ஒரு முறை ராப்பர் கென்யே வெஸ்ட், ப்ரான் ஆகியோர் ஃபேஸ்டைம் வீடியோ காலில் இருந்தபோது பீபர் திடீரென உட்புகுந்து தனது போட்டோக்களை பகிர்ந்து வெறுப்பேற்றியதாக கூறிய டெய்லர் தன்னை கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து பீபர் தனது நண்பர்களுடன் ஜிம் ஒன்றில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அவர்களை வெளியேறுமாறு நிர்வாகத்தினர் கூறிய சம்பவம் தெரியவந்துள்ளது. டெய்லர் ஸ்விப்ட் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக நேரத்தை புக் செய்திருப்பதாகவும், உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
தனிப்பட்ட நபருக்கான செயல்பட்டு வரும் அந்த ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ள வரும் ஒவ்வொருவரும் தங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம். அந்த வகையில் தனக்கான நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்த டெய்லர் ஸ்விப்ட்டுக்காக நேரத்தை புக் செய்யாமல் பயிற்சி மேற்கொண்டிருந்த பீபர் வெளியேற்றப்பட்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.