ETV Bharat / sitara

சர்ச்சையை ஏற்படுத்திய 'காட்மேன்' டீசர்! - டேனியல் பாலாஜியின் படங்கள்

டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'காட்மேன்' இணையத் தொடரின் டீசர் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

godman
godman
author img

By

Published : May 28, 2020, 10:22 AM IST

ஹாலிவுட்டில் தோன்றிய இணையத் தொடர் முறை தற்போது அனைத்து மொழிகளிலும் களம் இறங்கியுள்ளது. இணையத் தொடர் பார்பதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. திரைப்படத்தைப் போன்ற தணிக்கைக் குழு இணையத் தொடருக்கு கிடையாது என்பதால் படைப்பாளர்கள் தங்களது கருத்தை மிகச் சுதந்திரமாக கூறிவருகின்றனர்.

அதே நேரத்தில் உச்சகட்ட கவர்ச்சி, இரட்டை அர்த்தங்கள், ஆபாச காட்சிகள், வன்முறைகள் என அனைத்தும் இணையத் தொடரில் இடம்பெறுகின்றன.

அந்த வகையில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது 'காட்மேன்' இணையத் தொடர். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஜூன் 12ஆம் தேதி ஒளிப்பரப்பவிருக்கும் இந்த இணையத் தொடரின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் சாமியார் வேடத்தில் தோன்றும் ஜெய்பிரகாஷ் டேனியல் பாலாஜியிடம், "ஒரு பிராமணர் மட்டும்தான் வேதம் படிக்க வேண்டும் என எந்தச் சாஸ்திரமும் கூறவில்லை.

என்னைச் சுத்தி இருக்கிற எல்லா பிராமணர்களும் அயோக்கியர்களாக உள்ளனர். நீ வேதம் படிக்க வேணடும் அய்யனார்" என்று கூறுகிறார்.

இதன்பின் டேனியல் பாலாஜியின் சில உச்சகட்ட படுக்கையறை காட்சிகளும் அதில் காட்டப்படுகின்றன. ஒரு பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டப்போகிறேன் எனக் கூறுவது உள்ளிட்ட சில காட்சிகளுடன் டீசர் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத இந்த டீசர், பிராமணர்கள், இந்து மதத்தைப் புண்படுத்துவதாக உள்ளதாக எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த இணையத் தொடருக்கு எப்படியும் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சாவடி அடித்து சமாதி கட்டும் டேனியல் பாலாஜி இப்போ 'காட்மேன்'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.