சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் பல நடிகர்கள் இணைந்து வருகின்றனர். நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில், தற்போது நடிகர் கலையரசன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films) நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்க, “சில்லுன்னு ஒரு காதல்”, நெடுஞ்சாலை” படப்புகழ் இயக்குநர் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சிம்புவின் “பத்து தல” படத்தில் இணைந்த கலையரசன்!