ETV Bharat / sitara

மேடை நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த அமெரிக்க நடிகருக்கு கரோனா - ஹாலிவுட் செய்திகள்

அமெரிக்காவின் பிரபல நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான டி.எல்.ஹுக்லி முன்னதாக மேடை நிகழ்ச்சி ஒன்றில் மயங்கி விழுந்த நிலையில், தற்போது அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டி.எல்.ஹுக்லி
டி.எல்.ஹுக்லி
author img

By

Published : Jun 22, 2020, 1:05 PM IST

பிரபல நடிகர், அரசியல் விமர்சகர், ஸ்டாண்ட் அப் காமெடியன், ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளர், எழுத்தாளர் என பல திறமைகளைக் கொண்ட அமெரிக்காவின் பன்முகக் கலைஞர் டி.எல்.ஹுக்லி. முன்னதாக இவர் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தபோது ரசிகர்கள் முன்னிலையில் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

இச்சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியிருந்த நிலையில், தற்போது தான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை ஹூக்லி உறுதி செய்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தனக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை என்றும், ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், வாசனை, சுவை ஆகியவற்றை உணரும் தன்மையை இழந்து விட்டதாகவும், காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

”மேடையில், நிகழ்ச்சியின் மத்தியில் மயங்கி விழுந்ததால் பரிசோதனை மேற்கொண்டுதான் ஆக வேண்டும்” என தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் இது குறித்து பேசியுள்ள ஹூக்லி, தான் தங்கும் அறையிலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னதாக காமெடி க்ளப் ஒன்றில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து உரையாடிக் கொண்டிருந்த ஹூக்லி, மேடையிலேயே மயங்கி விழுந்த வீடியோ ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மலாலாவுக்கு வாழ்த்து கூறிய பிரியங்கா சோப்ரா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.