சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து 'நட்புனா என்னானு தெரியுமா' படம் மூலம் கோலிவுட்டில் கால்பதித்த இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி மூலம் கவினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். இதனால் மீண்டும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரபல ஆங்கில நாளிதழ், 2019-இல் தொலைக்காட்சியில் மக்களால் அதிகமாக விரும்பப்பட்ட டாப் 20 நபரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடம் அவர்களுக்கு உள்ள வரவேற்பு மற்றும் பிரபலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு டாப் 10 பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மக்களால் அதிகமாக விரும்பப்பட்ட நடிகர் என்ற பட்டியலில் கவின் முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகின் ராவ் மற்றும் நான்காவது இடத்தில் தர்ஷன் ஆகியோர் உள்ளனர்.
-
"Most desirable man". I've never actually thought of myself like that. But it feels jolly when someone says like that. 😁 So i thank @chennaitimestoi and the people who thought so & My hearty wishes to all other winners.😊 I will keep working hard to entertain you all forever! pic.twitter.com/foz7Iu4289
— Kavin (@Kavin_m_0431) January 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"Most desirable man". I've never actually thought of myself like that. But it feels jolly when someone says like that. 😁 So i thank @chennaitimestoi and the people who thought so & My hearty wishes to all other winners.😊 I will keep working hard to entertain you all forever! pic.twitter.com/foz7Iu4289
— Kavin (@Kavin_m_0431) January 31, 2020"Most desirable man". I've never actually thought of myself like that. But it feels jolly when someone says like that. 😁 So i thank @chennaitimestoi and the people who thought so & My hearty wishes to all other winners.😊 I will keep working hard to entertain you all forever! pic.twitter.com/foz7Iu4289
— Kavin (@Kavin_m_0431) January 31, 2020
இது குறித்து கவின், 'என்னுடைய பெயரை இந்த பட்டியலில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை பற்றி என்னிடம் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. என் நண்பர்கள் என்னிடம் விளையாடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன்.
பிறகு உண்மை என்று தெரிந்த பிறகு, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இது என்னை மேலும் கடினமாக உழைக்க உதவுகிறது. மேலும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று. யார் என்று தெரியாதவர்களுடன் 16 நாட்கள் தொலைப்பேசி இல்லாமல், வெளியுலகம் தெரியாமல் இருப்பது அவ்வளவு எளிதல்ல. நான் வெளியே எப்படி என் நண்பர்களுடன் இருந்தேனோ அதே போன்றுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தேன். இப்போது நான் சிங்கிளாகதான் இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ரசிகர்கள் என்னது சிங்கிளா இருக்கீங்களா? அப்போ லாஸ்லியாவுடனா காதல் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'சைக்கோ-2 படம் கண்டிப்பாக வரும்' - உதயநிதி ஸ்டாலின்