பொதுவாக பிக்பாஸ் (Bigg Boss) காலை போடும் பாடலுக்கு அன்றைய நாளுக்கும் எதோ ஒரு தொடர்பு இருக்கும்.
ஆனால் கடந்த சில தினங்களாக என்னதான் ஆச்சி நம்ப பிக்பாஸுக்கு என்று நம்மை யோசிக்க வைத்துவிட்டது. ஏனென்றால் தினமும் சம்மந்தம் இல்லாமல் பாடலை ஒலிக்கவைக்கிறார்.
என்ன நடந்தது 47 ஆவது எபிசோட்டில்..
இரண்டு நாள்களாக ஒரே கண்ணாடி டாஸ்க் தான் நேற்றைய (நவ.18) எபிசோட்டிலும் நடைபெற்றது. ஆனால் என்ன நேற்று வருண், தாமரையால் எபிசோட் சற்று நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் சென்றது.
காலையிலேயே தொடங்கிய ஏழரை
வருண் தனது நீர் ஆற்றலைப் பயன்படுத்தி இந்த வாரம் முழுவதும் வீட்டை ஆளுமை செய்துவருகிறார். காலையிலேயே நிரூப் மூலம் ஏழரை தொடங்கியது. தனது ஆளுமையை எப்படியாகக் காட்டவேண்டும், என்பதற்காக வருண் அனைவரையும் தண்ணீர் குடிக்க வைத்தார்.
அதை நான் ஏன் செய்யவேண்டும் என நிரூப் டாஸ்க் செய்ய மறுக்க காலையிலேயே ஏழரை தொடங்கியது என நம்மை யோசிக்க வைத்தது.
பிரியங்கா- ராஜுவின் லுட்டி
டாஸ்க் பஸ்ஸர் தொடங்கியவுடன் ராஜுவும், பிரியங்காவும் (Priyanka) வேற லெவலில் நகைச்சுவை செய்தனர். பிரியங்கா செய்த அனைத்தையும் ராஜு செய்தது பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.
நீருப்பை வெச்சி செய்த வருண்
கண்ணாடி டாஸ்க் தொடங்கியது. இரண்டு எதிரிகளான வருண், நிரூப் ஒன்றாக நின்றனர். அப்போது வருண், "நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?. என்னைப் பார்த்தா உனக்குப் பயம். அதனால தான் என்ன டாஸ்க் விளையாட விட மட்டுர.
நான் என் வழில போறேன். என்னைச் சீண்டினால் உன்ன விட மாட்டேன்" என படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் பேசியது போல் வசனம் பேசினார். இதைப் பார்த்த நமக்கே யாரு டா இவன், எங்க டா இருந்தான் இவளோ நாளா என நம்மை யோசிக்க வைத்துவிட்டது.
சாப்டாக பாவனியை வறுத்தெடுத்த அக்ஷரா
பாவனி- அக்ஷராவின் கண்ணாடி டாஸ்க் தொடங்கியது. பாவனியை நோக்கி அக்ஷரா, " நீங்க ரொம்பவும் ஸ்மார்ட். சிரித்துக் கொண்டே அனைவரையும் வெச்சி செய்யக்கூடியவர்.
சண்டை போடுவது போல், போட்டுவிட்டு, டார்லிங் என கூறுவது உங்கள் வழக்கம். அதனால் தான் நான் உங்ககிட்ட இருந்து தள்ளி நிக்கறேன்" எனச் சாப்டாக பாவனியை அக்ஷராவை வறுத்தெடுத்தார்.
முட்டிக்கொண்ட தாமரை, இசை
கடைசியாகச் சென்ற ஜோடி இசை - தாமரை. இசையை நோக்கி பேசிய தாமரை, "நீ எனக்கு அறிவு இல்லை என்று சொன்ன, ஆனால் உனக்குச் சொல்லும் அளவுக்கு எனக்கு அறிவு இருக்கிறது. நீ கையெடுத்து கும்பிடுவது எனக்கு கோபத்தை ஏற்படுத்தும்" என அவரை படு பயங்கரமாகப் பேசி கலாய்த்தார்.
உடனே பிக்பாஸ் போதும் பா என டாஸ்க் பேல் அடித்தார். இதுபோதுமே என இருவரும் சண்டைபோடப் போட்டியாளர்கள் அனைவரும் வழக்கம் போல் அவர்களை வேடிக்கை பார்த்தனர்.
இதையும் படிங்க: BB DAY 46: கண்ணாடி டாஸ்க்கில் வார்த்தையைக் கொட்டிய போட்டியாளர்கள்!