பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-3 மூலம் பிரபலமானவர் முகின் ராவ். மலேசியா நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இவர், தமிழ்நாட்டிற்கு வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அனைவரிடமும் அன்பாகப் பழகும் முகின், 'அன்பு ஒன்று தான் அனாதை' என்று கூறி மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டார். இந்த நிலையில் முகின் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் (52 வயது) நேற்று மாலை நெஞ்சு வலி (கார்டியாக் அரெஸ்ட்) காரணமாக உயிரிழந்தார். மேலும், அவரின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 2.30 - 3.30 மணிக்குள் மலேசியா நாட்டில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
முகின் ராவ் தனது படத்தின் ஷூட்டிங்குக்காக சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ் ராவின் திடீர் மரணம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியது குற்றம் - நடிகர் ராதா ரவி