ETV Bharat / sitara

ஜூன் 10 முதல் சீரியல் ஷூட்டிங் தொடக்கம் - ஆர்.கே. செல்வமணி

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஜூன் 10ஆம் தேதிமுதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.செல்வமணி
ஆர்.கே.செல்வமணி
author img

By

Published : Jun 1, 2020, 7:51 PM IST

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், "திரைப்படத் தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக சென்னை பனையூரில் ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்காகத் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புத் தொடங்கும். வெளிமாநிலங்களிலிருந்து இங்கு வரும் நடிகர், நடிகைகளுக்கு விரைவாக மருத்துவப் பரிசோதனை நடத்தி மருத்துவச் சான்று அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

திரைப்படப் படப்பிடிப்புத் தொடங்குவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. 80 விழுக்காடு பணிகள் வெளியிடங்களில் நடப்பதால் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். எனவே திரைப்படப் படப்பிடிப்புத் தொடங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

ஊரடங்கால் திரைத் துறைக்கு இதுவரை 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.டி.ஜி. முறையில் திரைப்படம் வெளியிடப்படுவதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

செல்வமணி அம்மா படப்பிடிப்புத் தளம் கட்டுவதற்கு அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கியுள்ளர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.