2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல்முறையாக அரையிறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இதை பலரும் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஜோயர்ட் மரிஜ்னே, குடும்பமே மன்னித்துவிடு, நான் பின்னர் வருகிறேன் என குறிப்பிட்டு இந்திய மகளிர் ஹாக்கி அணியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இதை ரீட்வீட் செய்த ஷாருக்கான், ஒன்றும் பிரச்னையில்லை. திரும்பி வரும்போது கோடிக்கணக்கான குடும்பங்களுக்காக தங்கத்தை கொண்டு வாருங்கள். முன்னாள் கோச் கபீர் கான் (சக் தே இந்தியா படத்தில் ஷாருக் பெயர்) என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜோயர்ட் மரிஜ்னே, அனைவரின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. எங்களால் முடிந்த அளவு உழைப்பை கொடுப்போம். இப்படிக்கு ரியல் கோச் என கண்ணடிக்கும் ஸ்மைலி போட்டு கலாய்த்திருக்கிறார்.
இதையும் படிங்க: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ‘chak de india' நடிகை வாழ்த்து