ETV Bharat / sitara

#3YearsOf96 - உண்மைக் காதலுக்கு ஒரு சாட்சி

பெரும்பான்மையான மக்கள் கொண்டாடும் திரைப்படம் கல்ட் திரைப்படத்தின் (cult movie) வரிசையில் இணைகிறது. அப்படி பலரால் கொண்டாடப்பட்ட தமிழ்த் திரைப்படம் 96 வெளியாகி இன்றோடு மூன்றாண்டு நிறைவடைகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

3-years-of-96
3-years-of-96
author img

By

Published : Oct 4, 2021, 2:03 PM IST

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதோ ஒரு காலகட்டத்தில் கூடுதல் பணிச்சுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, தாழ்வு மனப்பான்மை, வெறுப்புணர்வு போன்ற சில காரணிகள் தீராத அழுத்தத்தைக் கொடுக்கும். அந்த அத்தனை இடர்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி, நமது பால்ய கால நண்பர்களையோ அல்லது காதலியையோ பல ஆண்டுகளுக்குப்பின் சந்திக்கும்போதோ, நினைத்துப் பார்க்கும்போதோ நிகழும்.

அப்படி 22 வருடங்களுக்கு முன் பள்ளிக் காலத்தில் நேரிடையாக வார்த்தைகளால் சொல்லாமல் காதலித்துக் கொண்ட காதலர்கள் இருவர், முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நேரிடையாகப் பார்த்துக் கொண்டால் என்ன நடக்கும். அவர்களுக்கு சில மணிநேரங்கள் கிடைத்தால், அவர்களின் பரிதவிப்புகள் கண்ணியமான முறையில் என்ன செய்யும். அந்த சேரா வலி எவ்வாறு இருவரையும் ஆட்டுவிக்கும் என்பதை இதயத்துடிப்புக்குள் நுழைத்து சொன்ன படம் தான் '96'.

உண்மைக் காதலுக்கு ஒரு சாட்சி
உண்மைக் காதலுக்கு ஒரு சாட்சி

காதல் நிகழ்த்தும் மேஜிக்

உணர்வுப்பூர்வமாகக் காதலித்து பிரிந்த பலருக்கும் அவர்கள் வெற்றிபெற்ற துறையாக கலைத்துறையே இருக்கும். அதுதான் காதல் நிகழ்த்தும் மேஜிக். காதலி கிடைக்காத துயரில் எந்தவொரு கெட்டப்பழக்கங்களுக்கும் ஆட்படாமல் தாடி சகிதமாக, கேமராவை எடுத்துக் கொண்டு, தனிமையில் ஒரு நெடும்பயணம் செல்லும் பயணப்புகைப்படக்காரராக, ஒரு நடுத்தர குடும்ப இளைஞராக அதன் இயல்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருப்பார், கதையின் நாயகன் ராம் என்னும் விஜய்சேதுபதி. அது சமகால இளைஞர்களை பிரதிபலித்தது. அனைத்து மக்களையும் ஏற்க வைத்தது.

96 வெளியாகி இன்றோடு மூன்றாண்டு
96 வெளியாகி இன்றோடு மூன்றாண்டு

குறிப்பாக, மழை பொழியும்போது நாக்கை நீட்டுவது, முடி வெட்டுபவருக்கு முறுக்கு கொடுப்பது, கை ரிக்‌ஷாக்காரருடன் பேசிக்கொண்டு அவர் ரிக்‌ஷாவை இழுத்துக்கொண்டு வருவது, மரத்தில் தொங்குவது, அருவிச் சாரலில் அமர்ந்திருப்பது, மானுக்கு பிரெட் ஊட்டுவது என ராமாக நடித்த விஜய் சேதுபதி செய்யும் ஏதோ ஒரு செயலை நாமும் செய்திருப்போம். அந்த ஓர் புள்ளியில்தான் ராம் கதாபாத்திரம் பெரும்பான்மையானவர்கள் மனதுக்கு நெருக்கமானதாகத் தொடங்குகிறது.

பலராலும் சிலாகிக்கப்பட்டது பள்ளிப் பருவ காதல்

அந்த காட்சிகள் அனைத்தையும் இயக்குநர் பிரேம் குமார் அடிப்படையில் ஓர் ஒளிப்பதிவாளர் என்பதால், அழகாக மெனக்கெட்டுச் செதுக்கியிருப்பார். அந்தப்பாடலில் ஒளிப்பதிவை நெருக்கமாக பதிவு செய்திருப்பார்கள், 96 படத்தின் ஒளிப்பதிவாளர்கள்...இந்த படத்தில் பலராலும் சிலாகிக்கப்பட்டது பள்ளிப் பருவ காதல். அதிகமாக பேசாமல், சின்ன சின்ன காட்சிகள் மூலமே இயக்குநர் பள்ளிப் பருவ காதல் நினைவுகளை நமக்குள் கடத்தியிருப்பார்.

10ஆம் வகுப்பில் தன் உற்ற தோழியாக இருப்பவளை, காதல் வந்ததற்குப் பின் ராம் என்னும் கதாபாத்திரம் நேரிடையாக எதிர்கொள்ளத் தயங்குவதாகட்டும், தனியாக ஆய்வகத்துக்குள் சந்தித்துக்கொள்ளும் தருணம் கிடைத்தாலும் ராம் காதலை ஜானுவிடம் வெளிப்படுத்தமுடியாமல் பரிதவிப்பதாகட்டும், ஜானு காய்ச்சலில் நீண்டநாள் விடுப்பு எடுத்தபோது, அவளது இருக்கையையே பார்த்துக்கொண்டு இருக்கும் ராமுடைய வலி அத்தனையும் 80 மற்றும் 90 கிட்ஸ்கள், தன் வாழ்வில் நிச்சயம் கடந்திருப்பவை.

ராம்-ஜானு
ராம்-ஜானு

பள்ளிப்பாடகியாக இருக்கும் தான் காதலிக்கும் பெண்ணிடம் 'யமுனை ஆற்றிலே' பாடலை ராம் மறைமுகமாக கேட்பதாகட்டும், நேரிடையாக கேட்டால் தான் பாட்டு கிடைக்கும் என ஜானு காதலை ராமிடம் மறைமுகமாக கேட்கச்சொல்வதாகட்டும் அத்தனையும் ஒரு பதின்பருவத்தினரின் தவிப்பு.

மனதுக்கு நெருக்கமாகவே வைத்திருப்பார்

பிறந்தநாளின்போது தாவணியில் வரும் ஜானுவை தூரத்திலிருந்து ராம் திக்குமுக்காடிப்பார்க்கும்போதும் சரி, காதல் வந்தபிறகு காதலியின் முகத்தைப் பார்த்து 'ஹேப்பி பர்த் டே' என்று சொல்வதற்குக் கூட தயங்கும்போதும், படபடப்பில் ஜானு ராமின் மார்பில் கைவைத்ததும் மயங்கி விழும்போதும், இருவரும் காதலைப் பகிர்ந்துகொள்ளவில்லையென்றாலும் நடக்கும் உணவுப்பரிமாற்றமும் சரி, வீடு திரும்பும்போது, ஜானு இறுதியாக ராமின் சட்டைகளில் மை தெளிக்கும் காட்சிகளிலும் அழகியலும் ஆன்மாவும் மிஞ்சியிருந்தது.

தனிமையின் காதலன்
தனிமையின் காதலன்

அது ஒவ்வொருவரையும் தங்கள் பள்ளிக் காதலோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள எத்தனித்தது. மேற்கூறிய காட்சிகள் வழியாக இயக்குநர் எந்த இடத்திலும் ராம் - ஜானு கதாபாத்திரத்தை நம்மைவிட்டு விலகிவிடாமல், மனதுக்கு நெருக்கமாகவே வைத்திருப்பார்.

விர்ஜின் ராம்

22 வருடங்களுக்குப் பின் நடக்கும் முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பில், உருவம் மாறினாலும், மனதில் பால்ய கால இளைஞர்களைப்போல் நினைவுகளைச் சுமந்துகொண்டு, ஒருவரை ஒருவர் கட்டித்தழுவும் நண்பர்கள் ஆகட்டும், தங்களது குடும்பத்தை வாஞ்சையுடன் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்தும்போது அடிக்கும் கமெண்ட்கள் என அத்தனையும், படத்தில் வேற ஒரு ஃபீலுக்கு எடுத்துச் சென்றது.

இதைத்தொடர்ந்து வயது கூடிய ஜானுவாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது கலந்துகொள்ளும் த்ரிஷா, ராமைச் சந்திக்க தவிக்கும் நொடி கிளாஸிக் என்றால், தான் மிகவும் ரசித்த ஜானு தன் மார்பில் கை வைக்கும்போது, மயங்கி விழும்போதும் சரி; ஜானு எச்சில்பட்டு சுவைத்த ஸ்பூனில் உணவை உண்ணும்போதும் சரி ராம் ஆகிய விஜய்சேதுபதியின் நடிப்பு ஆவ்ஸம்! அதற்குப் பின்னணியிலான கோவிந்த் வஸந்தாவின் இசைகோர்ப்பும் அட்டகாசம்.

காதல் நிகழ்த்தும் மேஜிக்
காதல் நிகழ்த்தும் மேஜிக்

பல ஆண்டுகளுக்குப் பின் திடீரென்று தான் மிகவும் உருகி, உருகி காதலித்த பெண்ணை சந்தித்து, நேரம் ஒதுக்கி பார்க்கும் சூழல் ஏற்பட்டால், பலருக்கு மூளையில் எந்தவொரு காட்சியும் தென்படாது. அப்படி, காதலித்த இருவரும் சந்தித்துக்கொள்ளும்போது எங்கு செல்வது என தெரியாமல்,ஹோட்டலில் இருந்து வெளியேறும் காட்சிகள் கள உண்மை.

உண்மைக் காதலுக்கு ஒரு சாட்சி

அதிலும் தான் மனம் முழுக்க பார்க்க முடியாதா, பேசமுடியாதா என தவித்த காதலை வைத்திருந்த இருவர், ஒரு பின்னிரவில் பயணப்படும்போது இடையிடையே கைகள் உரசிக்கொள்ளுவதும், சேர்ந்து மனம் விட்டுப்பேசிக் கொண்டே நடக்கும் காட்சிகள் ஆகட்டும், அத்தனையும் கிடைக்காத காதலின் வலி, ஏக்கம். இந்த ஒவ்வொரு காட்சிகளிலும் கோவிந்த் வஸந்தாவின் இசைத்துணுக்குகள், நம் மூளையை விட்டும் மனதை விட்டும் அகலவில்லை.

ஜானுவைப் பிரிந்திருக்கும் ராம்
ஜானுவைப் பிரிந்திருக்கும் ராம்

குறிப்பாக, ஜானுவைப் பிரிந்திருக்கும் ராம், விர்ஜினாக ஜானுவை மட்டுமே நினைத்துக் கொண்டு, உடலின் தேவையை புறக்கணித்து வாழ்வது உண்மைக் காதலுக்கு ஒரு சாட்சி.

அதிலும் குறிப்பாக ராமின் வீட்டிற்குச் செல்லும் ஜானு, கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் தான் நேசித்தவனுக்கு சமைத்து கொடுக்கும் காட்சி ஆகட்டும்; தன் உற்றவனுக்குப் பிடித்த பாடலான ‘யமுனை ஆற்றிலே’ பாடலைப் பாடிக்காட்டுவதாகட்டும் அத்தனையும் கலப்படமில்லாத அன்பு.

மூன்று வருடம் நிறைவு

இறுதிக் காட்சியில் ஜானுவை விமானப் பயணத்துக்கு அனுப்ப கண்டிப்பாக எத்தனிக்கும் ராம், போக முடியாமல் பரிதவிக்கும் ஜானு என அத்தனையும் காதலைக் கடந்து வந்தவர்களின் வலி நிறைந்த துயர். தான் ரசித்த காதலித்த ஒருவனை, ஒரு இடைவெளியில் துளி ஆபாசமும் இல்லாமல் முகங்களில் கைப் புதைத்து ஜானு பிரியும் அத்தருணம் நமக்குள்ளும் ஒருகணம் கண்ணீர் முட்டியது, இதயத்துடிப்பு படபடத்தது. ஒரு கண்ணியம் தெரிந்தது.

உண்மைக் காதலுக்கு ஒரு சாட்சி
உண்மைக் காதலுக்கு ஒரு சாட்சி

'மாற்றங்கள் வினா, மாற்றங்களே விடை' மனித வாழ்க்கை பிரிவுத் துயரை சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும். அதை அழுத்தம் திருத்தமாக நம் மனதில் பதியச் செய்த 96 திரைப்படம் வெளியாகி மூன்று வருடம் நிறைவடைந்துள்ளது. ஜானுவின் பிரிவைத் தாண்டியும் ராம் சந்தோஷமாக இருக்கிறான் என்ற திருப்தி பார்வையாளனுக்கு கிடைத்து விடுகிறது. அந்த வகையில் '96' படம் பல காலங்கள் தாண்டியும், அனைவர் மனதிலும் நீங்காத காதலை உணர்த்திய ஓர் கல்ட் கிளாஸிக்; ஏனென்றால் ’96’ படம் தொலைந்து மீண்ட காதலர்களின் வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.