ETV Bharat / sitara

#23YearsofYuvanism: 'உங்கள் அன்பு இல்லையெனில் இதுவும் இல்லை' - யுவனின் இதயம் கனிந்த ட்வீட் - யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள்

தமிழ் சினிமாவில் 23 வருடங்களாக இசையமைத்துவரும் யுவன் ஷங்கர் ராஜாவிற்காக அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் #23YearsofYuvanism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

yuvan shankar raja
yuvan shankar raja
author img

By

Published : Feb 28, 2020, 2:04 PM IST

1997ஆம் ஆண்டு பார்த்திபன், சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் படத்திற்கு இசையமைத்தன் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு யுவன் ஷங்கர் ராஜா அறிமுகமானார். அரவிந்தன் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து #23YearsofYuvanism என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 23 வருடங்களாக இசையமைத்து வருவது சாதாரண விஷயம் கிடையாது. இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்ததால், இசை இவருக்கு கைவந்த கலையாக இருந்துள்ளது. இருப்பினும் தனது சொந்த முயற்சியால் இசையைக் கற்றுக்கொண்டு தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்து இன்று வரை முன்னணி இசையமைப்பாளராக வலம்வருகிறார்.

மெலடி, ராக் பாடல், குத்து பாடல், கிராமிய பாடல் எனப் பலவிதமான வெரைட்டி பாடல்களை இளமை ததும்பும் விதமாக கொடுத்து, தனக்கென தனிப்பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர், தற்போது 'தல 60' உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்துவருகிறார்.

  • This wouldn't have happened if not for your love and encouragement all through these years, your love has only motivated me to go higher and I will. My heart is filled with love and gratitude. Alhamdhulillah #23yearsofYuvan #23YearsofYuvanism

    — Raja yuvan (@thisisysr) February 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த 2015இல் யூ1 ரெக்கார்ட்ஸ் என்று நிறுவனத்தை தொடங்கிய யுவன் ஷங்கர் ராஜா, அதன் மூலம் பாடல்கள், ஆல்பங்கள் ஆகியவற்றை வெளியிட்டுவருகிறார்.

இதனையடுத்து யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ”இத்தனை ஆண்டுகள் உங்ளது அன்பும் ஊக்கமும் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது. உங்கள் அன்பு உயர்ந்த நிலைக்கு வளர என்னைத் தூண்டியது. உங்களுக்கு நான் என்ன செய்வேன். உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த அன்பும் நன்றியும் கடவுள் ஆசீர்வதிப்பாராக” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிங்க: யுவன் இசையில் ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.