காதல் தேவதையாக பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த ’96’ திரைப்படத்தில் நடித்த த்ரிஷா அதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து த்ரிஷா தற்போது ராங்கி எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் ஒரு ஆக்ஷன், த்ரில்லர் படமாக வெளிவர இருக்கிறது. ராங்கிக்கு சி. சத்யா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் மலையாள நடிகை அனஸ்வர ராஜன் ராங்கி திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.