ஏராளாமான படங்களில் நடித்துவரும் யோகிபாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதில் ஒருபடம் தான் மண்டேலா.
இப்படத்தை சசிகாந்த் வழங்க பாலாஜி மோகன் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இப்படம் நேரடியாக டிவியில் வெளியாக உள்ளது. ஏலே படம் திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்னையால் ஓடிடியில் வெளியிடாமல் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அதேபாணியில் இந்தபடமும் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி ஞாயிறன்று காலை 9.30மணிக்கு விஜய் டிவியில் வெளியிடப்படுகிறது. அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.