ETV Bharat / sitara

மூன்று மொழிகளில் வெளியாகும் யோகிபாபுவின் தர்மபிரபு படம்! - Yogibabu latest movie

சென்னை : யோகிபாபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'தர்மபிரபு' திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Yogibabu's Dharmaprabhu
Yogibabu's Dharmaprabhu
author img

By

Published : Sep 4, 2020, 2:37 PM IST

ஸ்ரீவாரி ஃபிலிம் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் தர்மபிரபு. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த நகைச்சுவை திரைப்படம், அப்போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது இந்த படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சாட்டிலைட் மூலமாகவும் ஓடிடி தளத்தின் மூலமாகவும் வெளியிடப்படுகிறது.

அதன்படி தெலுங்கில் இத்திரைப்படத்தின் வசனங்களையும் பாடல்களையும் அட்ஷத் என்பவர் எழுதியுள்ளார். அதேபோல கன்னடத்தில் உமா என்பவரும், மலையாளத்தில் நிஷாத் என்பவரும் இத்திரைப்படத்தின் வசனங்களையும் பாடல்களையும் எழுதியுள்ளனர்.

எமலோகத்தில், எமன் பதவி காலியாகிறது. புதிய எமனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், அனுபவம் அடிப்படையில் சித்ரகுப்தனாக உள்ள கருணாகரனும் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யார் எமன் பதவியை வெல்லப்போகிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து கலகலப்பான வகையில் தர்மபிரபு திரைப்படம் சொல்லியிருந்தது.

இத்திரைப்படம் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரபல கன்னட நடிகை வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிரடி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.