ETV Bharat / sitara

95 நாள் போராட்டம் - குழந்தைபோல் நடந்து பழகும் யாஷிகா - யாஷிகா விபத்து

நடிகை யாஷிகா கார் விபத்து நடந்து 95 நாள்களுக்குப் பிறகு, குழந்தைபோல் நடந்துவரும் காணொலி வெளியாகியுள்ளது.

யாஷிகா
யாஷிகா
author img

By

Published : Oct 30, 2021, 12:37 PM IST

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை 26ஆம் தேதி இரவு மாமல்லபுரம் அருகே நண்பர்களுடன் காரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியது.

அதில் அவரது தோழி பவனி ஷெட்டி உயிரிழந்தார். யாஷிகா உள்ளிட்ட இரண்டு நண்பர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட யாஷிகாவிற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அறுவைச் சிகிச்சை முடிந்து 95 நாள்களுக்குப் பிறகு குழந்தைபோல் கம்பியைப் பிடித்து நடக்க ஆரம்பித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், "குழந்தை போல் பாதத்தைத் தரையில் வைத்திருக்கிறேன். 95 நாள் பிரார்த்தனையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நான் விரைவில் ஆதரவு இல்லாமல் தனியாக நடப்பேன் என நம்பிக்கை இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: யாஷிகா ஆனந்த் உடல்நிலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.