பிக்பாஸ் பிரபலம் யாஷிகா தனது நண்பர்களுடன் கடந்த ஜூலை 25ஆம் தேதி காரில் சென்றபோது, விபத்தில் சிக்கினார். இதில் அவரின் தோழி வள்ளி ஷெட்டி உயிரிழக்க, யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
அவர் குறைந்தது ஐந்து மாதங்களுக்கு எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தான் மிகவும் மன வருத்தத்தில் இருப்பதாகவும், தோழியின் உயிரிழப்பு சாகும்வரை குற்ற உணர்ச்சியாக இருக்கும் என்றும் யாஷிகா சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர், காலில் கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் இருப்பதுபோல் உள்ளது.
இதனைக் கண்ட யாஷிகாவின் ரசிகர்கள், ''நீங்கள் விரைவில் நலமுடன் மீண்டுவர வேண்டி நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்" எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: “ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவு!