இயக்குநர் எஸ்.பி ஜனநாதனின் 'பேராண்மை', 'பூலோகம்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய்சேதுபதியை வைத்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். சந்திரா ஆர்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் கதையில் சர்வதேச அளவிலான பிரச்னையும் மையமாக பேசப்பட இருப்பதாகத் தெரிகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படபிடிப்பை பழனியில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தொடங்கினார்.
இதனையடுத்து இப்படத்தில் கதாநாயகி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முதலில் இப்படத்தில் அமலாபால் நடிக்க இருந்தாகவும் ஆனால் தற்போது மேகா ஆகாஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.