ஹாலிவுட்டில் ஸ்பைடர் மேன், பேட் மேன், தோர், அயர்ன்மேன் என பல சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு சூப்பர் ஹீரோயினை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு வெளியாகி, பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ’வொண்டர் வுமன்’
இஸ்ரேலிய அழகி நடிகை கால் கடோட் (Gal Gadot) வொண்டர் வுமனாகக் கலக்க , பேட்டீ ஜென்கின்ஸ் (Patty Jenkins)இன் இயக்கத்தில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ’வொண்டர் வுமன் 1984’ உருவாகியுள்ளது
இப்படத்தில் ப்ரைட்ஸ் மெய்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த சூப்பர் மாடல் நடிகையான க்ரிஸ்டன் விக் (Kristen Wiig), கேம் ஆஃப் த்ரோன்ஸ், நார்கோஸ் தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பெட்ரோ பாஸ்கல் (Pedro Pascal) இருவரும் முறையே சீட்டா (Cheetah) , மேக்ஸ் லார்ட் (Max Lord) ஆகிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தக் கூட்டணியால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்த இத்திரைப்படம், உலக மக்களின் வாழ்க்கையையே திருப்பிப் போட்டிருக்கும் கரோனா தொற்றுப் பரவலால் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது இத்திரைப்படம் குறித்து சுவாரஸ்யத் தகவல்களை பகிர்ந்துள்ள படத்தின் இயக்குநர் பேட்டீ ஜென்கின்ஸ், ’வொண்டர் வுமன் 1984’ திரைப்படத்தில் இரண்டு வில்லன் கதாபாத்திரங்கள் அமைந்தது தற்செயலான நிகழ்வுதான் என்றும், இது வணிக அம்சங்களுக்காக வலிந்து திணிக்கப்பட்டதல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
சீட்டா கதாபாத்திரத்தில் மட்டுமே தாங்கள் கவனம் செலுத்தியதாகவும், மேக்ஸ் லார்ட் கதாபாத்திரம் காமிக்ஸ் உலகில் பெரும்பங்காற்றியதால் கதையின் தேவைக்கேற்ப மற்றொரு வில்லன் கதாபாத்திரமாக சேர்த்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் கால் கடோட், க்ரிஸ்டன் என இரண்டு சூப்பர் மாடல் அழகிகள் திரையில் சண்டையிட்டுக் கொள்ளும்போது திரையரங்கம் நிச்சயம் அதிரும் எனவும் பேட்டீ ஜென்கின்ஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கால் கடோட் மிரட்டும் 'வொண்டர் வுமன் 1984' - டிரெய்லர் வெளியீடு!