ETV Bharat / sitara

’ஆதாரங்கள் அழிக்கப்படலாம்’ - சுஷாந்த் வழக்கு குறித்து பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

சுஷாந்த் மரணம் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பாஜக நிர்வாகி நீரஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

Niraj
Niraj
author img

By

Published : Aug 19, 2020, 10:06 AM IST

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் சிங் மரணம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சுஷாந்தின் உறவினரும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான நீரஜ் சிங் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு மும்பை காவல் துறையினர் இதுவரை பாதுகாப்புகூட வழங்கவில்லை. எங்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து அமலாக்கத்துறையினர், நடிகை ரியா, அவரது தம்பி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.