ETV Bharat / sitara

'சுஷாந்த் மனவலியில் இருந்தது எனக்கு தெரியும்' - ‘தில் பேச்சரா’ இயக்குநர்! - சுஷாந்த் சிங் மறைவு

நடிகர் சுஷாந்த் சிங் மறைவு குறித்து தில் பேச்சரா பட இயக்குநர் முகேஷ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sushanth
Sushanth
author img

By

Published : Jul 19, 2020, 5:13 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. அவரது இறப்பில் மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் சுஷாந்தின் நண்பர்கள், உறவினர்கள் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் தில் பேச்சரா பட இயக்குநர் முகேஷ், சுஷாந்த் சிங் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "சுஷாந்த் சிங் உயிரிழப்பதற்கு 18 நாட்களுக்கு முன்பு எனக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது என்னுடைய பிறந்தநாள் என்பதால், வாழ்த்து தெரிவித்துவிட்டு நீண்ட நேரமாக என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரை சில மாதங்களாக நான் சந்திக்கவில்லை. இருப்பினும் அவர் மனவலியில் இருந்தது எனக்குத் தெரியும். அவர் இறந்ததை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த தில் பேச்சரா திரைப்படம் வரும் 24ஆம் தேதி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.