மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் முத்துக்குமரன் இயக்கத்தில், நடிகர் விமல், வரலட்சுமி நடித்துள்ள படம் 'கன்னிராசி'. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், விமல், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
![கன்னிராசி படக்குழுவினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-kanniraasi-varalakshmi-script-7204954_13082019164801_1308f_1565695081_403.jpg)
அப்போது நடிகர் விமல் பேசுகையில், 'கன்னிராசி' படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குநருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், அவர் எப்போதும் பெண் கதாபாத்திரங்களுடேன் இருப்பார். அவர் என்னிடம் மற்றொரு கதையை சொன்னார் அந்த கதையிலும் நிறைய பெண்கள். இதற்கு மேல் நான் பேசவில்லை பேசினால் உளறிவிடுவேன்’ என்றார்.
![மெனத்தை கலைத்த விமல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-kanniraasi-varalakshmi-script-7204954_13082019164801_1308f_1565695081_491.jpg)
இதனைத்தொடர்ந்து படத்தின் நாயகி வரலட்சுமி பேசுகையில், 'கன்னிராசி' படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். கன்னிராசி படத்தில் வித்தியாசமான வரலட்சுமியை பார்ப்பீர்கள்’ என்று தெரிவித்தார்.
![கலகலவென சிரிக்கும் வரலட்சுமி சரத்குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-kanniraasi-varalakshmi-script-7204954_13082019164801_1308f_1565695081_376.jpg)
இதனையடுத்து பேசிய இயக்குநர் முத்துக்குமரன், 'கன்னிராசி' இரண்டு குடும்பத்தினருக்கிடையே நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். பழைய கன்னிராசி படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கன்னிராசி என்ற டைட்டில் வைத்துவிட்டு 2 ஆண்டுகள் படம் ரிலீசாக போராடினேன்’ என்றார்.