லைன் கிங் என்ற பெயர் இப்போது இருக்கும் சிறுவர்களுக்கு பெரிதாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் 90 கிட்ஸுக்கு மிகவும் பிடித்த காட்டூன் படங்களில் ஒன்று 'தி லைன் கிங்' கடந்த 1996- இல் சிங்க ராஜாவின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்த இந்த திரைப்படம் ஹிட்டானது. தற்போது இந்த படத்தை மீண்டும் உருவாக்குகிறார்கள். போட்டோ ரியலிஸ்டிக் கம்யூட்டர் அனிமேட்டெட் (Photo realistic computer animated) எனும் முறையில் இது வெளியாகிறது.
இதனால் பொம்பை படம் போல் இல்லாமல் நிஜமாகவே சிங்கமே வந்து நடித்துவிட்டு போனதைப்போல் இருக்கும். அப்படியே டிஸ்கவரி சேனல் பார்த்தைப் போன்று இருக்கும். வால்ட் டிஸ்னி தயாரிக்கும் இந்தப்படத்தை ஜோனாத்தன் ஃபேர்ரியூ (Jonathan Favreau) இயக்குகிறார். ஜங்கிள் புக் திரைப்படத்தை இயக்கினாரே அவரேதான்.
ஒரு ஊருல ஒரு சிங்க ராஜா இருந்தாராம் என்று நம்மில் பலரும் கேட்ட கதை என்றாலூம் அதை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்கள். காட்டில் வாழும் உயிர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற படத்திற்கு குரல் கொடுப்பவர்கள்தான் படத்திற்கு உயர் கொடுப்பவர்கள் என்று சொல்லலாம்.
சிங்க ராஜா சிம்பாவுக்கு பிரபல அமெரிக்க காமெடியன் டொனால்டு குளோவர் (Donald Glover) குரல் கொடுக்கிறார். சிங்கக்குட்டி சிம்பாவுக்கு ஜேடி மெக் கிராரி (JD McCrary) குரல் கொடுக்கிறார். பில்லி இச்னர், சிவ்டெல் எஜியோஃபோர், அல்பிரே வுட்டார்டு, பிரபல பாடகி பியான்ஸ் உள்ளிட்ட பலரும் குரல் கொடுக்கிறார்கள்.
இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதனை சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் ஜூலை 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.