கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்‘ தற்போது தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்து வருகிறது. சமீபத்தில் வசூலில் சாதனை படைத்த இப்படம், தற்போது மேலும் ஒரு புதிய சாதனையை தமிழகத்தில் நிகழ்த்தியுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் மாஸ் படமான 'மெர்சல்' படத்தின் தமிழ்நாட்டு வசூலை அஜித்தின் விஸ்வாசம் படம் முறியடித்துள்ளது. ‘விஸ்வாசம்‘ வெளிவந்து நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
இதற்கு முன்பு ‘எந்திரன்’ படமும் ‘பாகுபலி 2’ படமும் தான் நான்கு வாரங்கள் தாண்டி ஓடின. தற்போது அதே வரிசையில் ‘விஸ்வாசம்‘ படமும் நான்கு வாரங்களை தாண்டி தற்போது ஓடி சாதனை படைத்து வருகிறது.
இதனால் ‘விஸ்வாசம்‘ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல இதுவரை வெளியான படங்களில் அதிக ஷேர் கொடுத்த படங்கள் பட்டியலில் ‘பாகுபலி 2’, ‘சர்கார்‘, ‘மெர்சல்‘ படங்களுக்குப் பிறகு தற்போது ‘விஸ்வாசம்‘ படம் உள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்கான 50-வது நாள் (பிப்ரவரி 28, 2019) டிக்கெட் விற்பனையை சென்னையில் உள்ள தியேட்டர் துவங்கியது.
மெயின் ஸ்கிரீனுக்கான இந்த டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமிடத்திலேயே விற்றுத்தீர்ந்தது. மற்ற ஸ்கிரீன்களுக்கான டிக்கெட் விற்பனையும் வேகமாக விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் இம்மாதம் முழுவதும் திரையிடப்படும் என்பதால் முழு வசூல் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.