ETV Bharat / sitara

ஜூவாலா குட்டாவுடன் சேர்ந்து வாழத் திட்டம் - நடிகர் விஷ்ணு விஷால்

author img

By

Published : Sep 7, 2020, 10:34 PM IST

Updated : Sep 7, 2020, 10:45 PM IST

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் பிளேயர் ஜூவாலா குட்டாவுடன் சேர்ந்து வாழ இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஜாவ்லா குட்டா
ஜாவ்லா குட்டா

'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர், நடிகர் விஷ்ணு விஷால். இதன்பின் 'முண்டாசுபட்டி', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ஜீவா', 'ராட்சசன் ', 'நேற்று இன்று நாளை' உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவர் 2011ஆம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இதன்பின் இவர் இந்திய பேட்மிண்டன் பிளேயர் ஜூவாலா குட்டாவை காதலித்து வந்தார். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கிய விஷ்ணுவிஷால் தற்போது 'கார்டன்' உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால், ஜூவாலா குட்டாவின் பிறந்தநாளான இன்று(செப்டம்பர் 7), இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்க்கையைத் தொடர திட்டமிட்டிருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

இவரின் இந்த ட்வீட்க்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், சமூக வலைதள வார்த்தைகள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Last Updated : Sep 7, 2020, 10:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.