தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகி பின் 'தெறி', 'வடசென்னை', 'பிகில்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தீனா. இவர் படங்களில் மட்டும்தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதர் என பெயர் எடுத்தவர். மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து சமூக சேவையாற்றி வருகிறார்.
இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவியுள்ளார். தற்போது இவரின் சமூக சேவை மனப்பான்மையை பாராட்டி சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் இவருக்கு 'சேவா ரத்னா' விருது அளித்து பெருமைப்படுத்தி உள்ளது.