ETV Bharat / sitara

‘டாணாக்காரன்’ விக்ரம் பிரபு சினிமா கேரியரில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் - இயக்குநர் தமிழ் - டாணாக்காரன்

கல்லூரி மாணவர்களுக்கு நிகராக போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரஸ்யங்கள் உண்டு இதை மையமாக வைத்தே ‘டாணாக்காரன்’ உருவாகியதாக படத்தின் இயக்குநர் தமிழ் கூறியுள்ளார்.

Vikram Prabhu
Vikram Prabhu
author img

By

Published : Jul 22, 2021, 1:30 PM IST

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய தமிழ், ‘டாணாக்காரன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

விக்ரம் பிரபு நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார்.இவர்களுடன் லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

‘டாணாக்காரன்’ படத்தை ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Vikram Prabhu
டாணாக்காரன்

‘டாணாக்காரன்’ படம் குறித்து இயக்குநர் தமிழ் கூறியதாவது, “ போலீஸ் பயிற்சியில் உள்ள வாழ்க்கையை சொல்லும் படம் இது. கல்லூரி மாணவர்களுக்கு நிகராக போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரஸ்யங்கள் உண்டு.

வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இந்தப் படம் இருக்கும். எனக்கு ஏராளமான போலீஸ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்த அனுபவங்களை சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான பொழுதுப்போக்கு படமாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான உழைப்புக் கொடுத்து நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இந்தப் படம் விக்ரம் பிரபு சினிமா கேரியரில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடித்தோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்துள்ளதால் படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்” என கூறினார்.

இதையும் படிங்க: டாணாக்காரன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.