கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு, இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வீட்டிலிருந்து வெளியே வருகின்றனர்.
இதுதொடர்பாக, தற்போது இயக்குநர் விஜய் மில்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்பப் பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது.
-
Dir @vijaymilton 's statement regarding #Lockdown21 @DoneChannel1 pic.twitter.com/7RrAK3IdVI
— Ramesh Bala (@rameshlaus) March 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dir @vijaymilton 's statement regarding #Lockdown21 @DoneChannel1 pic.twitter.com/7RrAK3IdVI
— Ramesh Bala (@rameshlaus) March 31, 2020Dir @vijaymilton 's statement regarding #Lockdown21 @DoneChannel1 pic.twitter.com/7RrAK3IdVI
— Ramesh Bala (@rameshlaus) March 31, 2020
மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கிப் பூச்சி மருந்து தெளிப்பதையும், சொந்த ஊர்களுக்குத் திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதான் என்று நினைக்க ஆரம்பித்து விட்டோம். ஏற்கெனவே கயிறு கட்டியவன், கட்டாதவன் என வட்டம் போட்டுக் கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக் கொண்டிருக்கிறோம்.
சக மனிதர்களை ஏன் நண்பர்களைக் கூட அவநம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டுவிட்டது. நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என அச்சமாக இருக்கிறது.
இந்த ஆரவாரமெல்லாம் அடங்கியப் பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக்கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச்செல்வது தான் சமூகப் பொறுப்பு (social responsibility) என அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது” என்று விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நியூயார்க் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்த டாப்சி!