சீனு ராமசாமி இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஜய் சேதுபதி. நடிக்கவந்த ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் சிறிய வேடங்கள், குறும்படங்கள் என விஜய் சேதுபதி நடித்து வந்தார்.
தொடர்ந்து, தனது கடின உழைப்பு, அபார நடிப்பாற்றல் ஆகியவற்றின் மூலம் முன்னணி நடிகராக தற்போது விஜய் சேதுபதி உருவெடுத்துள்ளார். ஹீரோ வேடம் மட்டுமின்றி எந்த வகையான வேடங்களையும் ஏற்று நடிக்கும் விஜய் சேதுபதி, தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிக்க வந்த ஆரம்ப காலங்களில் சினிமா வாய்ப்பு கேட்டு விஜய் சேதுபதி அலைந்தபோது, விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட அவரது புகைப்படம் ஒன்று, தற்போது ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளது. இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்: தேவைப்பட்டால் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்படும்!