ETV Bharat / sitara

'பீஸ்ட்' படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லையா? சோகத்தில் ரசிகர்கள்..!

author img

By

Published : Mar 15, 2022, 6:54 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படம், வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் படத்திற்கான இசை வெளியீட்டு விழா கரோனா பரவல் காரணமாக நடைபெறாது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

கரோனா காரணமாக, நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

வழக்கமாக விஜயின் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறன்றன.

இசை வெளியீட்டு விழா

ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, விஜய் கூறும் குட்டிக் கதையைக் கேட்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இந்த மாதம் நடைபெறும் என கூறப்பட்டு இருந்தது.

ஆனால், தற்போது, கரோனா காரணமாக இசை வெளியீட்டு விழா நடைபெறாது என கூறப்படுகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் நேரடியாக நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரோபோ வெளியிட்ட 'கூகுள் குட்டப்பா' ட்ரெய்லர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.