தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம், 'மாஸ்டர்'. விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்த இப்படம் வசூல் ரீதியாக மட்டுமில்லாமல், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் விஜய்யின் 67ஆவது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்படத்தை லலித்குமார் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
![லோகேஷ் கனகராஜ் - விஜய்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13321702_vijay.jpg)
'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போதே இவர் விஜய்க்காக அடுத்த பட கதையைத் தயார் செய்துவிட்டாராம். மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கிவரும், 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெற்றிமாறனின் 'விடுதலை': போலீஸாக நடிக்கும் கெளதம் மேனன்?