ETV Bharat / sitara

'கில்தெம் வித் யுவர் சக்சஸ்'- மாஸ்டர் விஜய்!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் வழக்கம்போல் தனது பாணியில் குட்டி ஸ்டோரி கூறி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இசைவெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி கூறிய விஜய்

author img

By

Published : Mar 16, 2020, 1:06 PM IST

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள், ரசிகர்கள் என்று யாருமே அனுமதிக்கப்படாமல் மாஸ்டர் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர்.

விஜய் முதல் முறையாக தனது இசை வெளியீட்டு விழாவுக்கு கோட் சூட் அணிந்து வந்ததால், கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடி விஜய் ஒரு குட்டி ஸ்டோரி கூறி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

விழாவில் பேசிய அவர், ''நான் சொல்வது கதைனு சொல்ல முடியாது. நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம். என் படத்துலயே ஒரு பாட்டு ஒன்னு இருக்கு. 'எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே, நீ நதி போலே ஓடிக்கொண்டு இரு' இந்த பாடல் எல்லாரும் கேட்டிருப்பீங்கனு நினைக்கிறேன். கிட்டத்தட்ட நம் அனைவரின் வாழ்க்கையும் நதி போலதான். நதி ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கும். ஒரு இடத்தில் மக்கள் சிலர் விளக்கை ஏற்றி வைத்து வணங்குவார்கள். நதி போய்க்கிட்டே இருக்கும். பிடிக்காத சிலர் கல் எரிந்து விளையாடுவார்கள். அப்பவும் நதி போய்க்கொண்டே இருக்கும். நாமும் அதேபோல் நம் வேலையை செய்துட்டு நதி மாதிரி போய்க்கொண்டே இருக்கனும்.

இசைவெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி கூறிய விஜய்
இசைவெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி கூறிய விஜய்

இந்த பாடல் வரி போலதான், 'Life is very short nanba, Always be happy' அவ்ளோதாங்க, Kill them with your success. Bury them with your smile. மேலும் கொரோனா வைரஸ் காரணமாகதான் ரசிகர்களை அழைக்க முடியவில்லை. அவர்கள் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது'' என்று தனது உரையை முடித்தார்.

இதையும் படிங்க: 'கருப்பு கோட் சூட்'- மாஸ்டர் இசை விழாவுக்கு மாஸாக எண்ட்ரி கொடுத்த விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.