தமிழ்நாடு முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடையே கோரிக்கை விடுத்திருந்தார். அக்கோரிக்கையை ஏற்று முதலமைச்சரிடம் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர், மொதுமக்கள் என பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, 25 லட்சம் ரூபாயை வழங்கினார்.
முன்னதாக அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், சிவகுமார் குடும்பத்தினர், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கரோனா நிவாரண நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலாவதியாகும் பாஸ்போர்ட் - நீதிமன்றத்தை நாடிய கங்கனா