ETV Bharat / sitara

'சைரா நரசிம்மா ரெட்டி'யிடம் ஆசி பெற்ற ராஜ பாண்டி! - விஜய் சேதுபதி

'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தின் புரமோஷன் விழாவில் கலந்துகொண்ட மக்கள் செல்வன் அப்போது செய்த காரியத்தால் மெகா ஸ்டார் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

vijay
author img

By

Published : Sep 24, 2019, 9:43 AM IST

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. இதில் விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், ஜகபதி பாபு, அனுஷ்கா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, ராஜபாண்டி எனும் தமிழ் மன்னனின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் படத்தின் புரேமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விஜய்சேதுபதியை வாழ்த்தும் சிரஞ்சீவி

அப்போது சிரஞ்சீவி பேசுகையில், விஜய் சேதுபதி தொடர்ந்து படங்களில் நடித்துவரும் பிஸியான நடிகர். இவர் என்மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். என்னை படப்பிடிப்பில் அண்ணா என்று அழைப்பார். விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

இப்படி சிரஞ்சீவி தன்னைப் புகழ்ந்து கொண்டு பேசுகையில் திடீரென விஜய் சேதுபதி சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதை சற்றும் எதிர்பாராத சிரஞ்சீவி அதிர்ச்சியடைந்தார்.
பின் விஜய் சேதுபதியை தூக்கி வாழ்த்தினார். இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சமூக வலைதளத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க:

'என்னடா இது மக்கள் செல்வனுக்கு வந்த சோதனை'- விஜய் சேதுபதி படத்துக்கு வந்த சிக்கல்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.