ETV Bharat / sitara

அப்போ 'சூரரைப் போற்று'...இப்போ 'மாஸ்டர்': ஐஎம்டிபியில் சாதனை படைக்கும் தமிழ் படங்கள் - ஐஎம்டிபியில் முதல் இடம் பிடித்த மாஸ்டர்

சென்னை: பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியின் பிரபலமான திரைப்படங்களின் பட்டியலில் விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் முதலிடத்தைபிடித்துள்ளது.

Master
Master
author img

By

Published : Jun 12, 2021, 5:50 PM IST

உலகம் முழுவதும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கி சிறந்த படங்கள், பிரபலமான படங்கள், இணையதளத் தொடர்கள் உள்ளிட்ட பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு வருகிறது. பிரபல திரைப்பட தரவுகள் தளமான ஐஎம்டிபி (IMDb) தற்போது 2021ஆம் ஆண்டு வரை வெளியான இந்தியப் படங்களின் பிரபலமான படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலோடு வெப்சீரிஸன் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. ஐஎம்டிபி ப்ரோ தளத்தின் தரவுகள் மூலம் அந்தந்த திரைப்படங்களின் பக்கங்கள் எத்தனை முறை இந்தியாவில் இருக்கும் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளன என்பதை கொண்டு இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு பிரபலமான திரைப்படங்கள் - வெப் சீரிஸ் பட்டியல் இதோ:

  • மாஸ்டர்
  • ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)
  • தி வைட் டைகர்
  • த்ரிஷயம் 2
  • நவம்பர் ஸ்டோரி (வெப் சீரிஸ்)
  • கர்ணன்
  • வக்கீல் சாப்
  • மஹாராணி (வெப் சீரிஸ்)
  • க்ராக்
  • தி கிரேட் இண்டியன் கிச்சன்

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள படங்களும் வெப் சீரிஸ்களும் ஏழு, அதற்கு அதிகமான மதிப்பீட்டை பெற்றுள்ளன. சமீபத்தில் தான் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் 9.1 மதிப்பெண்கள் பெற்று உலக அளவில் 3ஆவது இடத்தை பெற்றுள்ளதாக ஐஎம்டிபி தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.