லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
‘வாத்தி கம்மிங்’ பாடலை இதுவரை யூடியூப்பில் 20 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த சாதனை ஒருபுறமிருக்க, கானா, ஸ்பாட்டிஃபை ஆகிய அப்ளிகேசன்களில் ‘மாஸ்டர்’ ஆல்பத்தை இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் கேட்டிருக்கிறார்கள். இந்த புதிய சாதனையையும் ‘மாஸ்டர்’ ஆல்பம் படைத்துள்ளது.
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கமலுடன் ஜோடி சேரும் நதியா?